Tuesday, September 11, 2012

3/3

தமிழ் சினிமா ரிப்போர்ட் - ஜூலை 2012

சென்ற மாத அதிர்ச்சியான சகுனிக்கு பிறகு இந்த மாதம் பில்லா, நான் ஈ போன்ற பெரிய படங்கள் வெளியான மாதம். பில்லாவுக்காக அதற்கு முந்தைய வாரம் வெளியான நான் ஈயை தூக்கிவிட்டு பில்லாவை போட்டவர்களின் தியேட்டர்களில் ஈ ஓட்டப்பட்ட காரணத்தால் மீண்டும் நான் ஈ யை போட்டு கல்லா கட்டினார்கள்.

நான் ஈ
தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் எடுக்கப்பட்ட பைலிங்குவல் படம். ஆர்டிஸ்டே இல்லாமல் நல்ல பப்ளிசிட்டியினால் ஓப்பனிங் கிடைக்க, விறுவிறுப்பான திரைக்கதையும், ஈயின் அட்டகாசமும் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் படியான படமாய் அமைந்ததால் வசூலில் பின்னி எடுத்தது என்றே சொல்ல வேண்டும். அதுவும் பில்லாவிற்காக அடுத்த வாரத்திலேயே எடுக்கப்பட்டு மீண்டும் அடுத்த சில நாட்களிலேயே அதே தியேட்டர்களில் அதிக காட்சிகள் போடப்பட்டு சுமார் முப்பது கோடிக்கு மேல் தமிழில் மட்டுமே வசூல் செய்ததாய் சொல்கிறார்கள்.

பில்லா 2
மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தபடம். மிக மொக்கையான திரைகக்தையால் வந்த வீழ்ந்தது என்றே சொல்ல வேண்டும். பத்திரிக்கைகளில் வேண்டுமானால் படத்தின் தயாரிப்பாளர்கள் எழுபது கோடி வசூல் என்பது கோடி வசூல் என்று சொல்லலாம். கடைசியில் வாங்கிய விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்களுக்குத்தான் வலி தெரியும். அபாரமான ஓப்பனிங் மட்டுமே ஒரு சில ஏரியாக்களில் துண்டை மட்டும் மிஞ்சியிருக்க வைத்தது.

இந்த மாதத்தில் வெளி வந்த பொல்லாங்கு, மாலைப் பொழுதின் மயக்கத்திலே போன்ற படங்கள் வந்த சுவடு தெரியாமல் போனது. மேலும் சில சின்ன பட்ஜெட் படங்களுக்கும் அதே நிலை.

இந்த மாத ஹிட் : நான் ஈ

No comments:

Post a Comment